கண்மாய் கரைகளை பலப்படுத்தும் பணி தொடக்கம்
கண்மாய் கரைகளை பலப்படுத்தும் பணி தொடங்கியது.
சிவகாசி,
சிவகாசி மாநகரின் மையப்பகுதியில் உள்ள சிறுகுளம், பெரியகுளம் மற்றும் செங்குளம் கண்மாய்கள்தான் நகரின் முக்கிய நீர் ஆதாரம் ஆகும். இந்த கண்மாய்களுக்கு பல்வேறு பகுதியில் இருந்தும் மழை நீர் வரும் வகையில் நீர்வழிப்பாதைகள் அமைக்கப்பட்டது. இதற்கான பணிகளை பசுமை மன்றம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் செய்தது. இதனால் கண்மாய்களுக்கு அதிகளவில் தண்ணீர் வந்தது. நகரின் நிலத்தடி நீர் மட்டமும் உயர்ந்தது. இதற்கிடையில் கண்மாய் கரைகள் சேதம் அடைந்து காணப்பட்டது. அடுத்து வரும் நாட்களில் பெய்யும் மழைநீரால் கண்மாய் சேதம் அடைய வாய்ப்பு உள்ளது. இதற்கிடையில் கரைகளை பலப்படுத்தவும், நீர் வரத்து பாதைகளை சரி செய்யவும் பசுமை மன்றம் முடிவு செய்து மாவட்ட நிர்வாகத்திடம் அதற்கான அனுமதியை பெற்றது. இந்தநிலையில் இதற்கான தொடக்க விழா நடைபெற்றது. இதில் சிவகாசி எம்.எல்.ஏ. அசோகன், யூனியன் துணைத்தலைவர் விவேகன் ராஜ், டவுன் இன்ஸ்பெக்டர் சுபகுமார் மற்றும் பசுமை மன்ற நிர்வாகிகள் ரவி, வெங்கடேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.