கண்மாய் சீரமைப்பு பணி


கண்மாய் சீரமைப்பு பணி
x
தினத்தந்தி 22 Dec 2022 6:45 PM GMT (Updated: 22 Dec 2022 6:46 PM GMT)

கண்மாய் சீரமைப்பு பணி

சிவகங்கை

தேவகோட்டை

தேவகோட்டை ஒன்றியம், சிறுவத்தி ஊராட்சியில் உள்ள பொன்னத்தி கண்மாய் சீரமைக்கும் பணியினை ரூ.83.8 லட்சம் செலவில் சீரமைக்கும் பணியை மாங்குடி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார். முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்பேரில், நீர்வளத்துறை அமைச்சர் பரிந்துரையின் பேரில் சிவகங்கை மாவட்டத்தில் கண்மாய்கள் தரப்படுத்துதல் பணி நடைபெற்று வருகிறது.

இந்நிகழ்வில் பரமக்குடி கோட்ட நீர்வள ஆதாரத்துறை உதவிசெயற்பொறியாளர் ராஜேந்திரன், உதவி பொறியாளர்கள் முருகன், மகேந்திரபாண்டியன், முத்தமிழரசு, சிறுவத்தி ஊராட்சி மன்றத்தலைவர் சத்யா, மாவட்ட காங்கிரஸ் துணைத்தலைவர் அப்பச்சி சபாபதி, தேவகோட்டை கிழக்கு நகரத்தலைவர் சஞ்சய், முத்துக்குமார், வீரமணி, சங்கர், திருவேகம்பத்தூர் அருண்ராஜ், புகழேந்தி, பெத்து மற்றும் கிராம மக்கள் கலந்து கொண்டனர்.


Next Story