திருப்பரங்குன்றம் அருகே குப்பை கிடங்காக மாறும் கண்மாய் - நடவடிக்கை எடுக்கக்கோரி மனு

திருப்பரங்குன்றம் அருகே குப்பை கிடங்காக மாறும் கண்மாய் - நடவடிக்கை எடுக்கக்கோரி மனு
x

திருப்பரங்குன்றம் அருகே குப்பை கிடங்காக கண்மாய் மாறுவதை தவிர்க்க தனியாக இடம் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று கலெக்டரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது.

மதுரை

திருப்பரங்குன்றம்,

திருப்பரங்குன்றம் அருகே குப்பை கிடங்காக கண்மாய் மாறுவதை தவிர்க்க தனியாக இடம் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று கலெக்டரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது.

கண்மாய்க்குள் குப்பை கிடங்கு

திருப்பரங்குன்றம் பஞ்சாயத்து யூனியனுக்கு உட்பட்ட தனக்கன்குளம் ஊராட்சி வார்டு உறுப்பினரும், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட குழு உறுப்பினருமான ஜெகநேசன் மதுரை மாவட்ட கலெக்டருக்கு மனு கொடுத்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

தனக்கன்குளம் ஊராட்சியில் 25 ஆயிரத்திற்கும் மேல் மக்கள் வசித்து வருகிறார்கள். இந்த ஊராட்சியில் குப்பை கிடங்கிற்கு இடவசதி இல்லை. நிலத்தடி நீர் ஆதாரமான கண்மாயில் குப்பைகளை கொட்டும் நிலை இருந்து வருகிறது. குப்பைகளை கொட்டுவதற்கு என்று அரசு நத்தம் புறம்போக்கு இடத்தினை ஒதுக்கி தருமாறு கிராம நிர்வாக அதிகாரியிடம் ஊராட்சி நிர்வாகம் வலியுறுத்தி வருகிறது.

இடம் ஒதுக்க வேண்டும்

நிலத்தடி நீர் ஆதாரமான கண்மாய் குப்பை சேமிப்பு கிடங்காக உருமாறி வருவதை தவிர்க்கவும், திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை முறையாக செயல்படுத்திடவும் அரசு புறம்போக்கு இடம் ஒதுக்கீடு செய்யவேண்டும். மேலும் தனக்கன்குளம் ஊராட்சிக்கு உட்பட்ட நேதாஜி நகரில் உள்ள 65 செண்ட் அரசுபுறம் இடம் குறித்து ஆய்வு செய்து அரசு திட்டபணிக்கு உரிய இடத்தினை ஒதுக்கீடு செய்யவேண்டும்.

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related Tags :
Next Story