கண்மாயில் மீன்பிடி திருவிழா


கண்மாயில் மீன்பிடி திருவிழா
x

கண்மாயில் மீன்பிடி திருவிழா நடைபெற்றது.

புதுக்கோட்டை

பாரம்பரியத்தை போற்றும் விதமாக கண்மாய் மற்றும் நீர்நிலைகளில் நீர் குறையும் காலங்களில் மீன்பிடி திருவிழா நடைபெறுவது வழக்கம். சுற்று வட்டாரத்தை சேர்ந்த கிராமமக்கள் திரண்டு வந்து மீன்பிடித்து செல்வர். அதன்படி நேற்று புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அருகே திருக்களம்பூர் ஊராட்சி குமாரப்பட்டி கொள்ளணி கண்மாயில் மீன்பிடி திருவிழா நடைபெற்றது. சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த திரளான பொதுமக்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டு கண்மாயில் இறங்கி ஊத்தா குத்தி மீன்களை பிடித்தனர். இதில் கட்லா, ரோகு, விரால் உள்ளிட்ட பலவகை மீன்களை பிடித்தனர். பின்னர் பொதுமக்கள் மீன்களை வீட்டிற்கு கொண்டு சென்று சமைத்து சாப்பிட்டனர். ஊத்தா குத்தி என்பது கூடையை வைத்து மீன்களை பிடிப்பதாகும். மீன்கள் கூடையில் சிக்கியது கூடை ஓட்டை வழியாக தெரிந்தவுடன் மீன்களை பிடிப்பார்கள்.


Next Story