கண்மாயில் களைகட்டிய மீன்பிடி திருவிழா


கண்மாயில் களைகட்டிய மீன்பிடி திருவிழா
x
தினத்தந்தி 31 July 2023 7:00 PM GMT (Updated: 31 July 2023 7:01 PM GMT)

சிங்கம்புணரி அருகே கண்மாயில் மீன்பிடித் திருவிழா களைகட்டியது.

சிவகங்கை

சிங்கம்புணரி,

சிங்கம்புணரி அருகே கண்மாயில் மீன்பிடித் திருவிழா களைகட்டியது.

மீன்பிடி திருவிழா

சிங்கம்புணரி அருகே எஸ்.வையாபுரிபட்டி ஊராட்சியில் சிறு மருது பகுதியில் கடப்பன் கண்மாய் உள்ளது. இந்த கண்மாயில் இருந்து 300 ஏக்கருக்கும் மேற்பட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. மேலும் கடந்த ஆண்டு இந்த கண்மாய் நிரம்பி மறுகால் பாய்ந்தது. இந்நிலையில் இந்த கண்மாயில் கடும் வெயிலின் காரணமாக தண்ணீர் குறையத் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து கடப்பன் கண்மாயில் மீன்பிடி திருவிழா நடத்த கிராமத்தினரால் முடிவு செய்யப்பட்டு மீன்பிடி திருவிழா நடைபெற்றது.

மகிழ்ச்சியுடன் திரும்பினர்

இதற்காக அதிகாலை முதல் மேலப்பட்டி, ஒடுவன்பட்டி, முட்டாக்கட்டி, பிரான்மலை, வேங்கைபட்டி, அணைக்கரைப்பட்டி எஸ்.வி.மங்கலம், சிவபுரிபட்டி உள்ளிட்ட சுற்றுப்புற கிராமத்தை சேர்ந்த 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ஊத்தா, கச்சா, வலை, அரிகூடை உள்ளிட்ட உபகரணங்களுடன் மீன்களை பிடிக்க தயாராக காத்திருந்தனர். ஊர் முக்கியஸ்தர்கள் மீன்பிடி திருவிழாவை வெள்ளை வீசியதும் கண்மாய் சுற்றி காத்திருந்த கிராம மக்கள் மீன்களை அள்ள கண்மாய்க்குள் இறங்கி மீன்பிடிக்க தொடங்கினர். இவர்களிடம் விரால், ஜிலேபி, கெண்டை உள்ளிட்ட மீன்கள் சிக்கின. அனைவருக்கும் போதிய அளவு மீன்கள் சிக்கியதால் மகிழ்ச்சியுடன் வீடுதிரும்பினர்.


Next Story