கண்ணபிரான் கோவில் கும்பாபிஷேகம்


கண்ணபிரான் கோவில் கும்பாபிஷேகம்
x

சிறுவளையம் கிராமத்தில் கண்ணபிரான் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.

ராணிப்பேட்டை

நெமிலி

நெமிலியை அடுத்த சிறுவளையம் கிராமத்தில் உள்ள கண்ணபிரான் கோவிலில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. முதலாவது நாளான 14-ந் தேதி காலையில் கருட கொடி ஏற்றுதல், பந்தக்கால் நடுதல் உள்ளிட்டவை நடைபெற்றது.

2-வது நாளான 15-ந் தேதி பக்தர்கள் காப்பு கட்டுதல், நாலாயிர திவ்யபிரபந்தம், திருமஞ்சணம், விஷ்வக்சேன பூஜை, புன்யாவாசன பூஜை, மகாசங்கல்பம், முதல்கால ஹோமம், லட்சுமி ஹோமம், குங்கும அர்ச்சனை, மபா பூர்ணாஹூதி, மகா தீபாராதனை ஆகியவை நடைபெற்றது. நேற்று திவ்ய பிரபந்தசேவை, துளசி அர்ச்சனை ஆகியவை நடைபெற்றது.

அதைத்தொடர்ந்து இன்று மகா பூர்ணாஹூதி, தீபாராதனையும், யாக சாலையில் இருந்து பூஜிக்கப்பட்ட கலசங்கள் வேத மந்திரங்களுடன் எடுத்து செல்லப்பட்டு கோவில் விமான கோபுர கலசத்தின்மீது புனிதநீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

இதில் சிறப்பு விருந்தினராக சோளிங்கர் சட்டமன்ற உறுப்பினர் ஏ.எம்.முனிரத்தினம் கலந்து கொண்டார். மேலும் சிறுவளையம் ஊராட்சி மன்ற தலைவர் ருக்குமணி தயாளன், மாவட்ட கவுன்சிலர் சக்தி, மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் வெங்கடேசன்,

ஒன்றிய கவுன்சிலர் மாரிமுத்து, ஊராட்சி மன்ற துணை தலைவர் அஞ்சலி சீனிவாசன், காங்கிரஸ் மாவட்ட செயலாளர் அருண்குமார், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சேகர் உள்ளிட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர்.


Related Tags :
Next Story