கன்னியம்மன் கோவில் தீமிதி திருவிழா


கன்னியம்மன் கோவில் தீமிதி திருவிழா
x

கன்னியம்மன் கோவில் தீமிதி திருவிழா நடைபெற்றது.

அரியலூர்

அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள சோழமாதேவி கிராமத்தில் பிரசித்தி பெற்ற கன்னியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் திருப்பணிகள் நிறைவடைந்து கோவில் கும்பாபிஷேகம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்றது. கோவில் திருப்பணிகள் நடைபெற்று கடந்த 3 ஆண்டுகளாக கோவிலில் தீமிதி திருவிழா நடைபெறவில்லை. எனவே இந்த ஆண்டு ஊர் முக்கியஸ்தர்கள், கிராம பொதுமக்கள் ஒன்றிணைந்து தீமிதி திருவிழா நடத்த முடிவு செய்தனர். அதன்படி கடந்த சில தினங்களுக்கு முன்பு கொடியேற்றத்துடன் தொடங்கி அம்மன் வீதி உலா நிகழ்ச்சிகள் நடைபெற்று வந்தது. முக்கிய நிகழ்வான தீமிதி திருவிழா நேற்று மாலை வெகு விமர்சையாக நடைபெற்றது. கோவில் வளாகத்திற்கு முன்பு அமைக்கப்பட்ட அக்னி குண்டத்தில் பக்தர்கள் விரதமிருந்து தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். முதலில் சக்தி கரகம், அக்னி கரகம் ஏந்திய பக்தர்கள் தீ மிதித்தனர். பின்னர் மற்ற பக்தர்கள் வரிசையாக ஒருவர் பின் ஒருவராக அக்னி குண்டம் இறங்கி தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். இதில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை கங்கணம் கட்டிக்கொண்டு தீமிதித்தனர்.


Next Story