பராமரிப்பு பணி காரணமாக கன்னியாகுமரி- பெங்களூரு எக்ஸ்பிரஸ் ரெயில் பாதை மாற்றம்


பராமரிப்பு பணி காரணமாக கன்னியாகுமரி- பெங்களூரு எக்ஸ்பிரஸ் ரெயில் பாதை மாற்றம்
x
தினத்தந்தி 25 Jun 2023 12:10 AM IST (Updated: 25 Jun 2023 3:12 PM IST)
t-max-icont-min-icon

பராமரிப்பு பணி காரணமாக கன்னியாகுமரி- பெங்களூரு எக்ஸ்பிரஸ் ரெயில் மாற்றுப்பாதையில் இயக்கப்படுகிறது

சேலம்

சூரமங்கலம்

சேலம் ரெயில்வே கோட்டம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

பெங்களூரு அருகே மாலூர்- தேவன்கொந்தி ெரயில் நிலையங்களுக்கு இடையே உள்ள ரெயில்வே பாலம் பகுதியில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. இதையொட்டி கீழ் கண்ட ெரயில் மாற்றுப்பாதையில் இயக்கப்படுகிறது.

அதன்படி கன்னியாகுமரி- பெங்களூரு எக்ஸ்பிரஸ் ெரயில் (வண்டி எண் 16525) நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) கன்னியாகுமரியில் இருந்து காலை 10.10 மணிக்கு புறப்பட்டு நெல்லை, மதுரை, சேலம் வந்து அங்கிருந்து மாற்றுப்பாதையான ஓமலூர், ஓசூர், பையனப்பஅள்ளி வழியாக செல்லும்.

இந்த ரெயில் திருப்பத்தூர், குப்பம், பங்காருபேட்டை, மாலூர், ஒயிட்பீல்டு, கிருஷ்ணராஜபுரம் வழியாக செல்லாது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story