கரடிகுளம் சின்னகாலனியில் மேல்நிலை நீர்தேக்க தொட்டி திறப்பு விழா


கரடிகுளம் சின்னகாலனியில்   மேல்நிலை நீர்தேக்க தொட்டி திறப்பு விழா
x
தினத்தந்தி 12 Dec 2022 6:45 PM GMT (Updated: 12 Dec 2022 6:47 PM GMT)

கரடிகுளம் சின்னகாலனியில் மேல்நிலை நீர்தேக்க தொட்டி திறப்பு விழா நடந்தது. இதில் யூனியன் தலைவர் மாணிக்கராஜா கலந்து கொண்டார்.

தூத்துக்குடி

கழுகுமலை:

கரடிகுளம் சின்னகாலனியில் 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்தேக்க தொட்டி திறப்பு விழா நேற்று நடைபெற்றது. விழாவிற்கு கரடிகுளம் ஊராட்சி மன்ற தலைவர் ‌ஜெயசுந்தரிதங்கவேல் தலைமை தாங்கினார். துணை தலைவர் ஆரோக்கியம் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக கயத்தாறு யூனியன் தலைவர் மாணிக்கராஜா கலந்து கொண்டு புதிய மேல்நிலை நீர்தேக்க தொட்டியை திறந்து வைத்தார். தொடர்ந்து அதே பகுதியில் ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய சுகாதார வளாகத்தையும் அவர் திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் கயத்தாறு வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அரவிந்தன், பானு, அ.ம.மு.க. ஒன்றிய செயலாளர் கணபதிபாண்டியன், அரசு ஒப்பந்தக்காரர்கள் அய்யணன், காளிராஜ், தகவல் தொழில்நுட்ப பிரிவு மந்திரமூர்த்தி மற்றும் திட்ட பணியாளர், ஓவர்சீயர்கள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story