மாரியம்மன் கோவிலில் கரகம் திருட்டு
தர்மபுரி
பாலக்கோடு:-
பாலக்கோட்டை அடுத்த மல்லுப்பட்டியில் மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு சொந்தமான கரகம் திடீரென மாயமானது. இதுகுறித்து கோவில் தர்மகர்த்தா சுதர்சனன், மகேந்திரமங்கலம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் கரகத்தை திருடி பாலக்கோட்டை சேர்ந்த கணேசன் (வயது 45) என்பவருக்கு விற்பனை செய்யப்பட்டது தெரிய வந்தது. இதுதொடர்பாக கோவில் பூசாரி சின்னமுனியன் (70). அதே பகுதியை சேர்ந்த தேவி (30), மாதம்மாள் (32), ராஜேஸ்வரி (47), பெரியசாமி (40) மற்றும் கரகத்தை வாங்கிய கணேசன் ஆகிய 6 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து மேல் விசாரணை நடத்தினர்.
Related Tags :
Next Story