சென்னை எழும்பூரில் 'காரைக்குடி சந்தை' நிகழ்ச்சி


சென்னை எழும்பூரில் காரைக்குடி சந்தை நிகழ்ச்சி
x

சென்னை வாழ் காரைக்குடி நகரத்தார் சங்கத்தின் சார்பில், மகளிர் தொழில் முனைவோரின் மேம்பாட்டுக்காக சென்னை எழும்பூரில் உள்ள ராணி மெய்யம்மை அரங்கில் ‘காரைக்குடி சந்தை' என்ற நிகழ்ச்சி நேற்று நடத்தப்பட்டது.

சென்னை

நிகழ்ச்சியை, வாரணாசியில் உள்ள காசி நாட்டுக்கோட்டை நகரத்தார் சங்கத்தின் முன்னாள் துணைத்தலைவர் ஏ.எம்.கே.கருப்பன் தொடங்கி வைத்தார். சென்னை வாழ் காரைக்குடி நகரத்தார் சங்கத்தின் தலைவர் ஏ.எல்.சொக்கலிங்கம், துணை தலைவர் பி.எஸ்.ஆர்.எம்.ஏ. சுவாமிநாதன், செயலாளர் ஏ.எம்.கே.எம். பழனியப்பன், துணை செயலாளர் ஆர்.எம்.பி.எல். சிவராம், பொருளாளர் எல்.எஸ்.பி. லட்சுமணன் மற்றும் விஜி பழனியப்பன், விசாலாட்சி கணேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

'காரைக்குடி சந்தை' நிகழ்ச்சியில் 90 அரங்குகள் அமைக்கப்பட்டு இருந்தன. இதில் மகளிர் தொழில் முனைவோர் தயாரித்த மரச்செக்கு எண்ணெய்கள், மசாலா பொடிகள், வத்தல் வகைகள், ஊறுகாய்கள், நொறுக்குத் தீனி தின்பண்டங்கள், வெள்ளை பணியாரம், கவுனி அரிசி அல்வா, குழி பணியாரம் உள்ளிட்ட உணவு பொருட்கள் மற்றும் சேலைகள், போர்வைகள் உள்ளிட்ட ஜவுளி பொருட்கள், தங்கம் மற்றும் வைர நகைகள், அலங்கார பொருட்கள் உள்பட பல்வேறு வகையான பொருட்கள் இடம் பெற்றிருந்தன.

நேற்று காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை நடைபெற்ற இந்த காரைக்குடி சந்தை நிகழ்ச்சியில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கிச் சென்றனர்.


Next Story