வருடாபிஷேக விழா


வருடாபிஷேக விழா
x
தினத்தந்தி 5 Nov 2022 6:45 PM GMT (Updated: 5 Nov 2022 6:46 PM GMT)

காரைக்குடி முத்துமாரியம்மன் கோவில் வருடாபிஷேக விழா

சிவகங்கை

காரைக்குடி

காரைக்குடி மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன் கோவிலில் 6-வது ஆண்டு வருடாபிஷேக விழா வருகிற 9, 10-ந் தேதிகளில் நடைபெற உள்ளது. முன்னதாக வருகிற 9-ந்தேதி மாலை 6 மணிக்கு முதற்கால யாக வேள்விகளும், இரவு 8.30 மணிக்கு தீபாராதனை நிகழ்ச்சியும் நடக்கிறது. மறுநாள் 10-ந்தேதி காலை 8 மணிக்கு இரண்டாம் கால யாக வேள்வியும், 9.30 மணிக்கு பூர்ணாகுதி மற்றும் தீபாராதனைகளும், காலை 10.30மணிக்கு மஹா அபிஷேக ஆராதனைகளும், மதியம் 12.30 மணிக்கு அன்னதான நிகழ்ச்சியும் நடக்கிறது. மாலை 6 மணிக்கு முத்துமாரியம்மன் வீதி உலா நிகழ்ச்சியும் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ஞானசேகரன் தலைமையில் கோவில் செயல் அலுவலர் பாலாஜி மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.


Next Story