காரைக்குடி மாணவர்கள் சாதனை


காரைக்குடி மாணவர்கள் சாதனை
x
தினத்தந்தி 29 Aug 2023 6:45 PM GMT (Updated: 29 Aug 2023 6:46 PM GMT)

குறுவட்ட அளவிலான ஆக்கி போட்டியில் காரைக்குடி மாணவர்கள் சாதனை படைத்தனர்.

சிவகங்கை

காரைக்குடி,

காரைக்குடி குறுவட்ட அளவிலான குழு விளையாட்டு போட்டிகள் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக உடற்கல்வி கல்லூரியில் 2 நாட்கள் நடைபெற்றது. இதில் நடைபெற்ற ஆக்கி விளையாட்டு போட்டியில் 14 மற்றும் 17, 19 ஆகிய வயதுக்கு உட்பட்ட மாணவர்கள் பிரிவில் காரைக்குடி அழகப்பா மாதிரி மேல்நிலைப்பள்ளி 14 வயது பிரிவு அணியினர் இறுதி போட்டியில் அழகப்பா மெட்ரிக் மேல்நிலை பள்ளி அணியை 1-0 என்ற கோல் கணக்கிலும், 17 வயது மாணவர்கள் பிரிவு இறுதிபோட்டியில் காரைக்குடி மகரிஷி மெட்ரிக் மேல்நிலை பள்ளி அணியை 5-0 என்ற கணக்கிலும் வெற்றி பெற்று முதலிடத்தை பெற்றது. மேலும் வருவாய் மாவட்ட அளவிலான போட்டிகளுக்கும் தகுதி பெற்றது.

இதேபோல் 19 வயது மாணவர் பிரிவில் 2-வது இடம் பெற்ற இந்த பள்ளி ஆக்கி அணி வீரர்களை பள்ளிக்குழு தலைவர் மற்றும் பள்ளி செயலர், பள்ளி தலைமையாசிரியர், ஆசிரியர்கள், உடற்கல்வி இயக்குனர், உடற்கல்வி ஆசிரியர்கள் ஆகியோர் பாராட்டினர்.


Next Story