காரங்காடு தூய செங்கோல் மாதா ஆலய திருவிழா கொடியேற்றம்


காரங்காடு தூய செங்கோல் மாதா ஆலய திருவிழா கொடியேற்றம்
x

காரங்காடு தூய செங்கோல் மாதா ஆலய திருவிழா கொடியேற்றம் நடைபெற்றது.

ராமநாதபுரம்

தொண்டி,

திருவாடானை தாலுகா காரங்காடு கிராமத்தில் பிரசித்தி பெற்ற புதுமை புகழ் செங்கோல் மாதா திருத்தலம் உள்ளது.இந்த ஆலயத்தின் 131-ம் ஆண்டு திருவிழா கொடியேற்றம் நடைபெற்றது. பங்கு தந்தை அருள் ஜீவா தலைமையில் அருட் தந்தை வெனி.இளங்குமரன் அன்னையின் உருவம் பொறித்த கொடியை ஏற்றி வைத்தார்.அதனை தொடர்ந்து திருவிழா திருப்பலி நடைபெற்றது. இதில் அருட் தந்தையர்கள், அருட்சகோதரிகள், இறை மக்கள் கலந்து கொண்டு ஜெபம் செய்தனர். திருவிழாவில் 31-ந் தேதி புனித இன்னாசியார் திருவிழா திருப்பலியும், தேர் பவனியும், 1-ந் -தேதி அன்று திருவிழா ஆடம்பர கூட்டு திருப்பலி சப்பரபவனியும் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை பங்குத்தந்தை அருள் ஜீவா தலைமையில் அமலவை அருட்சகோதரிகள், பங்கு இறை மக்கள், கிராம நிர்வாக குழுவினர் செய்து வருகின்றனர்.

1 More update

Related Tags :
Next Story