காரிமங்கலம் பேரூராட்சியில் சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றம்
காரிமங்கலம் பேரூராட்சியில் சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றம்
காரிமங்கலம்:
காரிமங்கலம் பேரூராட்சிக்குட்பட்ட மொரப்பூர் ரோடு, தர்மபுரி ரோடு, பாலக்கோடு ரோடு ஆகிய பகுதிகளில் உள்ள வணிக நிறுவனங்கள், சாக்கடை கால்வாய் மற்றும் சாலையை ஆக்கிரமித்து தங்கள் நிறுவன வணிகத்திற்கு அதை பயன்படுத்தி வந்தனர். இதனால் சாக்கடை கால்வாய் தூர்வாரப்படாமல் கழிவுநீர் சாலைகளில் பெருக்கெடுத்து செல்வதாகவும், இதனால் பொதுமக்கள் அவதி அடைந்து வருவதாக புகார் எழுந்தது.
மேலும் ஆக்கிரமிப்புகள் காரணமாக காலை மற்றும் மாலை நேரங்களில் போக்குவரத்து நெரிசல் அதிகளவில் ஏற்பட்டு வாகன ஓட்டிகள், பொதுமக்கள் பாதிப்படைந்து வந்தனர். இதன் காரணமாக பேரூராட்சி நிர்வாகம் சார்பில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வலியுறுத்தி எச்சரிக்கை நோட்டீஸ் கொடுக்கப்பட்டது
ஆனால் வணிக நிறுவனங்கள் ஆக்கிரமிப்புகளை அகற்ற எவ்வித நடவடிக்கையும எடுக்கவில்லை. இதனால் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் நேற்று ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்படி சாக்கடை கால்வாயை ஆக்கிரமித்தவைகள் அகற்றப்பட்டன. இந்த பணி செயல் அலுவலர் டார்த்தி, தாசில்தார் சுகுமார் ஆகியோர் மேற்பார்வையில் போலீசார் பாதுகாப்புடன் நடந்தது.