காரிய கண்மாயில் மீன்பிடி திருவிழா
திருமயம் அருகே காரிய கண்மாயில் மீன்பிடி திருவிழா நடைபெற்றது.
புதுக்கோட்டை
மீன்பிடி திருவிழா
புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே கொசப்பட்டியில் காரிய கண்மாயில் ஒவ்வொரு ஆண்டும் விவசாயத்திற்கு பயன்படுத்தப்பட்ட தண்ணீர் போக மிஞ்சி இருக்கும் நீரில் கோடை காலங்களில் ஊத்தா குத்து மீன்பிடி திருவிழா நடைபெற்று வருகிறது. அதேபோல் இந்த ஆண்டும் நேற்று காரிய கண்மாயில் மீன்பிடி திருவிழா நடைபெற்றது.
இதில் ஆண்கள், பெண்கள் இளைஞர்கள் என ஏராளமானோர் ஒரே நேரத்தில் கண்மாய்க்குள் இறங்கி போட்டிப்போட்டுக் கொண்டு ஆர்வத்துடன் கையில் வைத்துள்ள ஊத்தா குத்தியை பயன்படுத்தி மீன் பிடித்தனர்.
சமைத்து சாப்பிட்டனர்
அப்போது அவர்களுக்கு விரால், கெண்டை, ஜிலேபி, கெலுத்தி, அயிரை, குறவை உள்பட பல்வேறு வகையான மீன்கள் கிடைத்தது. இதையடுத்து தங்களுக்கு கிடைத்த மீன்களை பொதுமக்கள் வீட்டிற்கு எடுத்து சென்று சமைத்து சாப்பிட்டு மகிழ்ந்தனர்.
Related Tags :
Next Story