வீரமங்கை வேலுநாச்சியார் பெயரில் பெண் காவலர்கள் பயிற்சி கல்லூரி
வீரமங்கை வேலுநாச்சியார் பெயரில் பெண் காவலர்கள் பயிற்சி கல்லூரி தொடங்க வேண்டும் என கார்த்தி சிதம்பரம் எம்.பி. கோரிக்கை விடுத்தார்.
காரைக்குடி,
சிவகங்கை நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:- சிவகங்கை மாவட்ட நிகழ்ச்சிகளில் நீங்கள் கலந்து கொள்ள வருகை தந்தபோது, விழா மேடையில் நான் தங்களிடம், இந்தியாவின் முதல் சுதந்திர போராட்ட வீராங்கனை வீர மங்கை வேலுநாச்சியார் சிறப்பினை போற்றும் வகையில், சிவகங்கை நகரை தலைமையிடமாக கொண்டு வீரமங்கை வேலுநாச்சியார் பெயரில் பெண் காவலர்கள் பயிற்சி கல்லூரி தொடங்க வேண்டி கோரிக்கை விடுத்திருந்தேன். தாங்களும் அந்த விழா மேடையிலேயே அதிகாரிகளுடன் கலந்து பேசி ஆய்வு மேற்கொண்டு வீரமங்கை வேலுநாச்சியார் பெயரில் பெண் காவலர்கள் பயிற்சி கல்லூரி தொடங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தீர்கள். அதன்படி இப்பயிற்சி கல்லூரியினை விரைவில் தொடங்கிட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.