அண்ணாமலையுடன் கார்த்தி சிதம்பரம் - இணையத்தில் பரவும் புகைப்படம்...!
அண்ணாமலையுடன் கார்த்தி சிதம்பரம் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையதளத்தில் வேகமாக பரவி வருகிறது.
சென்னை,
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மற்றும் காங்கிரஸ் எம்.பி. கார்த்திக் சிதம்பரம் ஆகியோருடன் சேர்ந்து விமான பயணி ஒருவர் எடுத்துக்கொண்டார்.
எதிரும், புதிருமான இரண்டு அரசியல் கட்சி தலைவர்கள் ஒன்றாக விமானத்தில் பயணித்தனர். இதை கண்ட விமானப் பயணி ஒருவர் இருவருடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துக்கொள்ள விரும்பியுள்ளார்.
அவரின் ஆசையை நிறைவேற்றும் வகையில் அண்ணாமலை மற்றும் காங்கிரஸ் எம்.பி. கார்த்திக் சிதம்பரம் புகைப்படத்திற்கு போஸ் கொடுத்தனர். தற்போது இந்த புகைப்படம் இணையதளத்தில் வேகமாக பரவி வருகிறது.
Related Tags :
Next Story