சிக்கல் சிங்காரவேலவர் கோவிலில் கார்த்திகை வழிபாடு


சிக்கல் சிங்காரவேலவர் கோவிலில் கார்த்திகை வழிபாடு
x

சிக்கல் சிங்காரவேலவர் கோவிலில் கார்த்திகை வழிபாடு

நாகப்பட்டினம்

நாகை மாவட்டம் சிக்கல் சிங்காரவேலவர் கோவிலில் நேற்று வைகாசி மாத கார்த்திகை வழிபாடு நடந்தது. இதையொட்டி சிங்காரவேலவருக்கு பால், தயிர், சந்தனம், விபூதி, பஞ்சாமிர்தம், பன்னீர் உள்ளிட்ட திரவிய பொருட்களால் சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தது. அதனை தொடர்ந்து சிங்காரவேலவர் சிறப்பு மலர் அலங்காரத்தில் வள்ளி, தெய்வானையுடன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

இதேபோல் வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோவிலில் நேற்று வைகாசி மாத கார்த்திகை சிறப்பு வழிபாடு நடந்தது. இதனையொட்டி ஆறுமுகக் கடவுளுக்கும், வெளிபிரகாரத்தில் உள்ள மேலக்குமரருக்கும் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தது. பின்னர் சாமிக்கு வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். கோடியக்காடு அமிர்தகடேஸ்வரர் கோவிலில் உள்ள வள்ளி, தெய்வானை சமேத அமிர்தகர சுப்பிரமணிய சாமிக்கு பால் உள்பட பல்வேறு பொருட்களால் அபிஷேகம் நடந்தது. பின்பு விபூதி அலங்காரத்துடன் வண்ணமலர்களால் சாமி அலங்கரிக்கப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தோப்புத்துறை கைலாசநாதர்கோவிலில் அமைந்துள்ள முருகனுக்கும், ஆறுகாட்டுத்துறை கற்பகவிநாயகர் கோவிலில் அமைந்துள்ள முருகனுக்கும், வேதாரண்யம் நகரில் அமைந்துள்ள நாட்டுமடம் மாரியம்மன் கோவிலில் உள்ள சுப்பிரமணியருக்கும் கார்த்திகையையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.


Next Story