கார்த்திகை தீபத்திருவிழா: லட்ச தீபத்தால் ஜொலித்த மீனாட்சியம்மன் கோவில் பொற்றாமரைகுளம்...!


கார்த்திகை தீபத்திருவிழா: லட்ச தீபத்தால் ஜொலித்த மீனாட்சியம்மன் கோவில் பொற்றாமரைகுளம்...!
x

கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு மதுரை மீனாட்சியம்மன் கோவில் பொற்றாமரைகுளம் லட்ச தீபத்தால் ஜொலித்தது.

மதுரை,

உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இந்தாண்டுக்கான கார்த்திகை மாத திருவிழா கடந்த 1-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி கோலாகலமாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், விழாவில் முக்கிய நாளான கார்த்திகை தீபமான இன்று மீனாட்சி அம்மன் கோவில் பொற்றாமரை குளம் முழுவதும் லட்ச தீபம் ஏற்றப்பட்டது. இதில் கோவில் பணியாளர்கள், பக்த சபையினர், பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு பொற்றாமரை குளம், அம்மன் சன்னதிகள் உள்ளிட்ட ஆலயம் முழுவதும் அகல் விளக்குகள் மூலம் லட்சதீபங்களை ஏற்றினர். பொற்றாமரை குளத்தை சுற்றியுள்ள படிகளில் தீபங்கள் ஏற்றப்பட்டதால் கண்கொள்ளா காட்சியாக உள்ளது.

இதனால் கோவில் வளாகம் முழுவதும் விளக்கொளியில் ஜொலித்தது. தொடர்ந்து மீனாட்சி, சுந்தரேசுவரர் கோவிலில் இருந்து புறப்பட்டு கீழமாசிவீதியில் உள்ள அம்மன் தேரடி மற்றும் சுவாமி சன்னதி தேரடி அருகில் சொக்கப்பனை கொளுத்தப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Next Story