ஏரல் சேர்மன் அருணாசல சுவாமி கோவிலில் கார்த்திகை தீபம்


ஏரல் சேர்மன் அருணாசல சுவாமி கோவிலில் கார்த்திகை தீபம்
x
தினத்தந்தி 8 Dec 2022 12:15 AM IST (Updated: 8 Dec 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

ஏரல் சேர்மன் அருணாசல சுவாமி கோவிலில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது.

தூத்துக்குடி

ஏரல்:

ஏரல் சேர்மன் அருணாசல சுவாமி கோவிலில் நேற்று முன்தினம் கார்த்திகை தீப திருவிழா கொண்டாடப்பட்டது. கார்த்திகை தீபத்தை ஏற்றி விழாவை கோவில் பரம்பரை அக்தார் அ.ரா.க.அ.கருத்தப்பாண்டிய நாடார் தொடங்கி வைத்தார். தொடர்ந்து கோவில் சுற்றுப்பிரகாரத்தில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது. கோவில் முன்பு பல வகை மூலிகைச் செடிகள் குச்சிகளில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டு அதன்பின்பு சிறப்பு பூஜை நடந்தது. மேலும் ஏரல் சிவன் கோவில், சவுக்கை முத்தாரம்மன் கோவில், ஏரல் நட்டார் கொண்ட அம்மன் கோவில் உள்பட பல கோவிலில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது.


Next Story