கோவில்களில் கார்த்திகை தீபத்திருவிழா
பொள்ளாச்சி பகுதியில் கோவில்களில் கார்த்திகை தீபத்திருவிழா நடைபெற்றது.
கிணத்துக்கடவு
பொள்ளாச்சி பகுதியில் கோவில்களில் கார்த்திகை தீபத்திருவிழா நடைபெற்றது.
கார்த்திகை தீபத்திருவிழா
கிணத்துக்கடவில் பொன்மலை மீது பிரசித்தி பெற்ற வேலாயுதசாமி கோவிலில் உள்ளது. இந்த கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழாவையொட்டி அதிகாலையில் நடை திறக்கப்பட்டு சுவாமிக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. தொடர்ந்து வேலாயுதசாமி ராஜ அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதையடுத்துது இரவு பொன்மலை மீது சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னதாக பொன்மலை வேலாயுத சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, பரணி தீபம் ஏற்றப்பட்டது. பின்னர் கோவில் முன்பு நட்டு வைக்கப்பட்டு இருந்த சொக்கப்பனை கொளுத்தப்பட்டது. இதில் பொன்மலை வேலாயுத சுவாமி கோவில் பரம்பரை அறங்காவலர் சண்முக சுந்தரி வெற்றிவேல்கோபண்ண மன்றாடியார் மற்றும் கிணத்துக்கடவு சுற்று வட்டார பகுதியில் இருந்து வந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
சொக்கப்பனை
இதேபோன்று பொள்ளாச்சி சுப்பிரமணிய சுவாமி கோவில் நேற்று காலை நடை திறக்கப்பட்டு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து சுப்பிரமணிய சுவாமி வள்ளி, தெய்வானையுடன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். பின்னர் மாலையில் சுப்பிரமணிய சுவாமிக்கு சிறப்பு அபிஷேக பூஜைகள் நடந்தது. தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் வள்ளி, தெய்வானையுடன் சுப்பிரமணியசுவாமி கோவில் வளாகத்தில் திருவீதி உலா வந்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
மேலும் கோவில் வளாகத்தில் சொக்கப்பனை கொளுத்தப்பட்டது. தொடர்ந்து தீபம் ஏற்றி பக்தர்கள் வழிப்பட்டனர். இது தவிர அய்யப்பன் கோவிலில் பக்தர்கள் தீபம் ஏற்றி உலா வந்து சாமி தரிசனம் செய்தனர்.
மாசாணி அம்மன் கோவிலிலும் சிறப்பு பூஜை நடைபெற்றது. மேலும் திருவீதி உலா நடந்தது. தொடர்ந்து சொக்கப்பனை கொளுத்தப்பட்டது. ஆழியாற்றங்கரையில் உள்ள சோமேஸ்வரர் கோவிலில் 16 வகையான அபிஷேகம் செய்து, சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
மாரியம்மன், மாகாளியம்மன், பத்ரகாளியம்மன், லட்சுமி நரசிம்மர் கோவில் உள்பட சுற்று வட்டார பகுதிகளில் உள்ள கோவில்களில் தீபம் ஏற்றி வழிபாடு நடைபெற்றது. மேலும் வீடுகளில் பெண்கள் கோலமிட்டு, தீபம் ஏற்றி வழிப்பட்டனர்.