பெரிய, சிறிய மலையில் கார்த்திகை திருவிழா தொடக்கம்


பெரிய, சிறிய மலையில் கார்த்திகை திருவிழா தொடக்கம்
x

சோளிங்கர் பெரிய, சிறிய மலையில் கார்த்திகை திருவிழா தொடங்கியது.

ராணிப்பேட்டை

சோளிங்கரில் பெரிய மலையில் யோக நரசிம்மா், சிறிய மலையில் யோக ஆஞ்சநேயர் கோவிலில் காா்த்திகை திருவிழா ஆண்டு தோறும் நடைபெருவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டும் காா்த்திகை திருவிழா வெள்ளிக்கிழமைதொடங்கியது. தொடா்ந்து அடுத்த மாதம் (டிசம்பா்) 18-ந் தேதி வரை நடைப்பெறுகிறது.

ஆண்டுதோரும் தியான நிலையில் அமா்ந்து அருள்பாலிக்கும் யோக நரசிம்மா் காா்த்திகை மாதத்தில் கண்திறந்து பக்தா்களுக்கு அருள்பாலிப்பதாக ஐதீகம். இதனால் கார்த்திகை மாதத்தில் வரும் வெள்ளிக்கிழமை மற்றும் ஞாயிற்று கிழமைகளில் ஏராளமான பக்தா்கள் நரசிம்மரை தரிசிக்க வருவது வழக்கம். இந்தநிலையில் முதல் ஞாயிற்றுகிழமையான நேற்று ஏராளமான பக்தா்கள் காலை முதலே யோக நரசிம்மரை தரிசிக்க குவிந்தனா்.

இதனால் சோளிங்கா் போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனா். அதேபோல் காா்த்திகை திருவிழா ஏற்பாடுகளை ஆலய நிா்வாகத்தினா் செய்துள்ளனா்.


Next Story