கருமாரியம்மன் கோவில் ஆடித்திருவிழா


கருமாரியம்மன் கோவில் ஆடித்திருவிழா
x

நாகை மறைமலைநகர் கருமாரியம்மன் கோவில் ஆடித்திருவிழா யாகசாலை பூஜையுடன் தொடங்கியது.

நாகப்பட்டினம்

வெளிப்பாளையம்:

நாகை காடம்பாடி மறைமலைநகரில் கருமாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆடித்திருவிழா நேற்று முன்தினம் இரவு யாக சாலை பூஜைகளுடன் தொடங்கியது. இதைமுன்னிட்டு கோவில் வளாகத்தில் யாக சாலை அமைக்கப்பட்டு புனித நீர் அடங்கிய கலசங்களுக்கு சிவாச்சாரியார்கள் பூஜைகள் செய்தனர். இதைத்தொடர்ந்து பூச்சொரிதல், சக்திகரகம் புறப்பாடு உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

1 More update

Next Story