3-ந்தேதி கருணாநிதி பிறந்த நாள் விழா: ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாட வேண்டும் தி.மு.க. கூட்டத்தில் அமைச்சர் செஞ்சி மஸ்தான் பேச்சு


3-ந்தேதி கருணாநிதி பிறந்த நாள் விழா:  ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாட வேண்டும்  தி.மு.க. கூட்டத்தில் அமைச்சர் செஞ்சி மஸ்தான் பேச்சு
x

3-ந்தேதி கருணாநிதி பிறந்த நாள் விழா: ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாட வேண்டும் என்று தி.மு.க. கூட்டத்தில் அமைச்சர் செஞ்சி மஸ்தான் பேசினாா்.

விழுப்புரம்

திண்டிவனம்,

விழுப்புரம் வடக்கு மாவட்ட தி.மு.க. அவசர செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட அவை தலைவர் நமச்சிவாயம் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளரும், சிறுபான்மை நலத்துறை அமைச்சருமான செஞ்சி மஸ்தான் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர் பேசுகையில், மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி பிறந்த நாளான வருகிற 3-ந்தேதி(வெள்ளிக்கிழமை) விழாவை மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும்ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி சிறப்பாக கொண்டாட வேண்டும்.

நகர, ஒன்றிய, பேரூர் செயலாளர்கள், தலைவர்கள் அந்தந்த பகுதிகளில் நலத்திட்ட உதவிகளை வழங்க வேண்டும். மேலும், தமிழக அரசின் ஓராண்டு சாதனை விளக்க தெருமுனை கூட்டங்கள் நடத்தி தி.மு.க. அரசின் சாதனைகளை மக்களுக்கு விளக்க வேண்டும் என்று பேசினார்.

கூட்டத்தில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் டாக்டர் மாசிலாமணி, வக்கீல் சேது நாதன், சீதாபதி சொக்கலிங்கம், செந்தமிழ்ச்செல்வன், மாநில மருத்துவர் அணி இணை செயலாளர் சேகர், மாநில பொதுக்குழு உறுப்பினர் ரமணன், தீர்மானக் குழு உறுப்பினர் செஞ்சி சிவா, நகர செயலாளர் ஆசிரியர் கண்ணன்,

திண்டிவனம் நகர மன்ற தலைவர் நிர்மலா ரவிச்சந்திரன், ஒன்றிய குழு தலைவர்கள் ஒலக்கூர் சொக்கலிங்கம், மரக்காணம் தயாளன், மயிலம் யோகேஸ்வரி மணிமாறன், ஒன்றியக்குழு துணை தலைவர்கள் ஒலக்கூர் ராஜாராம், மரக்காணம் பழனி, ஒன்றிய செயலாளர்கள் மணிமாறன், அண்ணாதுரை, துரை உள்பட மாநில, மாவட்ட, நகர , ஒன்றிய கிளை நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

1 More update

Next Story