கருணாநிதி நூற்றாண்டு பிறந்தநாள் விழா
சோளிங்கரில் கருணாநிதி நூற்றாண்டு பிறந்தநாள் விழா நடந்தது.
சோளிங்கர்
சோளிங்கர் நகராட்சி அண்ணாசிலை அருகில் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு பிறந்த நாள் விழா நடைபெற்றது. நகர செயலாளர் கோபி தலைமை தாங்கினார்.
நகராட்சி தலைவர் தமிழ்ச்செல்வி அசோகன், துணைத்தலைவர் ஏ.எஸ்.பழனி, தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினரும், சோளிங்கர் நகராட்சி உறுப்பினருமான அசோகன், மாவட்ட துணைச் செயலாளர் சிவானந்தம், முன்னாள் இளைஞரணி செயலாளரும், நகராட்சி உறுப்பினருமான அருண்ஆதி ஆகியோர் கருணாநிதி உருவப்படத்திற்கு மாலை அணிவித்து பொதுமக்களுக்கு அன்னதானம், இனிப்புகள் வழங்கினர்.
சோளிங்கர் நகராட்சி 24, 25-வது வார்டு தக்கன்குளம் அருகில் கருணாநிதி உருவப் படத்திற்கு மாலை அணிவித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார்கள். வார்டு உறுப்பினர் அருண்ஆதி தலைமை தாங்கினார்.
இதில் நகராட்சி உறுப்பினர்கள் ராதா வெங்கடேசன், லோகேஸ்வரி சரத்பாபு, கொண்டபாளையம் கோபி, சண்முகம், சசிகுமார், பன்னீர்செல்வம் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
சோளிங்கர் ஒன்றியம் போளிப்பாக்கம் கிராமத்தில் முன்னாள் கிழக்கு ஒன்றிய செயலாளர் செல்வம் தலைமை தாங்கினார்.
ஊராட்சி மன்ற தலைவர் கார்த்திக் முன்னிலை வகித்தார். கருணாநிதி உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செய்தனர். தொடர்ந்து இனிப்பு மற்றும் ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கினார்கள்.
சோளிங்கர் நகராட்சி 17-வது வார்டில் நகராட்சி உறுப்பினர் எஸ்.அன்பரசு தலைமையில் கருணாநிதி உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செய்தனர்.
நிகழ்ச்சியில் திரளான நிர்வாகிகளும், பொதுமக்களும் கலந்து கொண்டனர்.