கருணாநிதி நூற்றாண்டு விழா

நெல்லை அரசு அருங்காட்சியகத்தில் கருணாநிதி நூற்றாண்டு விழா நடந்தது.
திருநெல்வேலி
முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு அரசு அருங்காட்சியகத்தின் சார்பில் நடைபெற்று வரும் தொடர் இலக்கிய கூட்டம் காப்பாட்சியர் சிவ.சத்தியவள்ளி தலைமையில் நடைபெற்றது. மைய நூலக வாசகர் வட்ட துணைத்தலைவர் கோ.கணபதி சுப்ரமணியன் வரவேற்றார். கவிஞர் பாப்பாக்குடி இரா.செல்வமணி சிறப்புயாற்றினார். தமிழ் வளர்ச்சி பண்பாட்டு மையத்தின் இணைச் செயலாளர் புத்தனேரி கோ.செல்லப்பா, ஆசிரியர் சிவ.செல்வமாரிமுத்து, சமூக ஆர்வலர் சுரேஷ், அஸ்வின், பேராசிரியர்கள் பிரியதர்ஷினி, ஹரிஹரன், ஓய்வு பெற்ற உதவி கலெக்டர் தியாகராசன், நல் நூலகர் முத்துகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story