கருணாநிதி நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம்


கருணாநிதி நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம்
x
தினத்தந்தி 11 Aug 2023 1:00 AM IST (Updated: 11 Aug 2023 1:00 AM IST)
t-max-icont-min-icon
சேலம்

ஓமலூர்:-

ஓமலூரில் மத்திய மாவட்ட தி.மு.க. சார்பில் நடந்த கருணாநிதி நூற்றாண்டு விழா பொதுக்கூட்டத்தில் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பங்கேற்று பேசினார்.

பொதுக்கூட்டம்

ஓமலூர் பஸ் நிலையத்தில் சேலம் மத்திய மாவட்டம் ஓமலூர், காடையாம்பட்டி, தாரமங்கலம் ஒன்றிய தி.மு.க. சார்பில் கருணாநிதி நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. மத்திய மாவட்ட தி.மு.க. செயலாளர் ராஜேந்திரன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். ஓமலூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் ரமேஷ் வரவேற்றார். தெற்கு ஒன்றிய செயலாளர் செல்வகுமரன், வடக்கு ஒன்றிய செயலாளர் பாலசுப்பிரமணியம், காடையாம்பட்டி கிழக்கு ஒன்றிய செயலாளர் அறிவழகன், மேற்கு ஒன்றிய செயலாளர் ரவிச்சந்திரன், தாரமங்கலம் கிழக்கு ஒன்றிய செயலாளர் ராஜ அய்யப்பன், ஓமலூர் நகர செயலாளர் ரவிச்சந்திரன், காடையாம்பட்டி நகர செயலாளர் பிரபாகரன், கருப்பூர் நகர செயலாளர் லோகநாதன் ஆகியோர் முன்னிலைவகித்தனர்.

சிறப்பு அழைப்பாளர்களாக தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, தி.மு.க. பேச்சாளர் சூர்யா வெற்றி கொண்டான் ஆகியோர் கலந்து கொண்டனர். இதையடுத்து ஆர்.எஸ்.பாரதி பேசியதாவது:-

தி.மு.க.வுக்கு பயம் இல்லை

தமிழ்நாட்டில் வாரிசு அரசியல் நடத்துவதாக நாடாளுமன்றத்தில் கூறுகின்றனர் அவர்களுக்கு வேறு ஒன்றும் சொல்வதற்கு இல்லை. சி.பி.ஐ., வருமானவரித்துறை, அமலாக்கத்துறைகளை வைத்து கொண்டு எதிர்க்கட்சிகளை நசுக்கலாம் என மோடி நினைக்கிறார். ஆனால் இதனை கண்டு தி.மு.க.வுக்கு பயமும் இல்லை. இவ்வாறு அவர் பேசினார்.

இதில் மாவட்ட பொருளாளர் கார்த்திகேயன், தலைமை செயற்குழு உறுப்பினர் ராஜேந்திரன், மாவட்ட கவுன்சிலர்கள் அழகிரி சண்முகம், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் அருண் பிரசன்னா, பொறியாளர் காமராஜ், காமலாபுரம் ரமேஷ், உள்பட பலர் கலந்து கொண்டனர் முடிவில் ஓமலூர் பேரூராட்சி தலைவர் செல்வராணி நன்றி கூறினார்.


Next Story