கருணாநிதி நூற்றாண்டு நினைவு வளைவு


கருணாநிதி நூற்றாண்டு நினைவு வளைவு
x
தினத்தந்தி 30 Aug 2023 1:00 AM IST (Updated: 30 Aug 2023 1:00 AM IST)
t-max-icont-min-icon
நாமக்கல்

ராசிபுரம்:-

ராசிபுரம் நகர்மன்ற சாதாரண கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு நகர் மன்ற தலைவர் கவிதாசங்கர் தலைமை தாங்கினார். ஆணையாளர் சுபாஷினி முன்னிலை வகித்தார். கூட்டத்தில் ராசிபுரம் புதிய பஸ் நிலையம் முகப்பில் முன்னாள் முதல் அமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு நினைவு வளைவு கட்டுவதற்கு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் புதிய பஸ் நிலையத்தில் பஸ்கள் நிற்கும் இடம், பொதுமக்கள் நடைபாதையின் மேற்கூரை மிகவும் பழுது அடைந்து ஆபத்தான நிலையில் இருப்பதால் அதை உடனடியாக சீரமைப்பது உள்பட 25 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நகரில் அன்றாட தேவைகளான சீரான குடிநீர் வினியோகம், மின்விளக்கு பராமரிப்பு குறித்தும், பாதாள சாக்கடை திட்டம் நிறைவு பெற்ற போதிலும் சில வார்டுகளில் சீரமைக்கப்படாத சாலைகளால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் பாதிக்கப்படுவதாக கவுன்சிலர்கள் தெரிவித்தனர். இது பற்றி தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று நகர்மன்ற தலைவர் கவிதா சங்கர் பதில் அளித்தார். கூட்டத்தில் துணைத் தலைவர் கோமதி ஆனந்தன், நகர்மன்ற உறுப்பினர்கள், நகராட்சி பொறியாளர் சாந்தி வடிவேல், சுகாதார அலுவலர் செல்வராஜ், வருவாய் ஆய்வாளர் மாணிக்கம், நகராட்சி நகர அமைப்பு ஆய்வாளர் முருகேசன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.


Next Story