கூட்ட அரங்கத்திற்கு கருணாநிதி பெயர் சூட்ட தீர்மானம்


கூட்ட அரங்கத்திற்கு கருணாநிதி பெயர் சூட்ட தீர்மானம்
x

கூட்ட அரங்கத்திற்கு கருணாநிதி பெயர் சூட்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அரியலூர்

ஜெயங்கொண்டம்:

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றியக்குழுவின் சாதாரண கூட்டம், நேற்று எம்.ஜி.ஆர். கூட்ட மன்றத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றியக்குழு தலைவர் ரவிஷங்கர் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் லதா கண்ணன் முன்னிலை வகித்து பேசினார். கூட்டத்தில் தீர்மானங்களை உதவியாளர் மாலதி வாசித்தார். இதில் 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் அனைத்து கவுன்சிலர்களும் கலந்து கொண்டு, பல்வேறு கோரிக்கைகளை பற்றி விவாதித்தனர். அப்போது, கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கூட்ட மன்றத்திற்கு கருணாநிதி கூட்ட அரங்கம் என்று பெயர் வைக்க வேண்டும் என தி.மு.க. கவுன்சிலர்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து, ஒன்றியக்குழு தலைவர் அனைத்து கவுன்சிலர்களிடமும் கலந்து பேசி, மேலே உள்ள கூட்ட அரங்கத்திற்கு கருணாநிதி கூட்ட மன்றம் என பெயர் வைக்கப்படும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மேலும், போதுமான நிதி இல்லாததால் அடிப்படை வசதிகள் செய்யாத காரணத்தால் பொதுமக்கள் கவுன்சிலர்களை ஓட்டு போட்டு தேர்ந்தெடுத்து என்ன பயன்? என்று கேள்வி எழுப்புகின்றனர். மேலும் நிறைய பணிகள் நடைபெற்று முடிவடையாத நிலையில் உள்ளதால், தமிழக அரசு ஊராட்சிக்கு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும் என்று கவுன்சிலர்கள் கோரிக்கை வைத்தனர். முன்னதாக ஒன்றிய துணை வட்டார வளர்ச்சி அலுவலர் வெங்கடேசன் வரவேற்றார். முடிவில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் (நிர்வாகம்) தாமோதரன் நன்றி கூறினார்.


Next Story