கருணாநிதிக்கு பேனா வடிவ சிலை விவகாரம்: அமைச்சர் எ.வ.வேலு விளக்கம்


கருணாநிதிக்கு பேனா வடிவ சிலை விவகாரம்:  அமைச்சர் எ.வ.வேலு  விளக்கம்
x
தினத்தந்தி 24 July 2022 4:48 PM IST (Updated: 24 July 2022 7:33 PM IST)
t-max-icont-min-icon

முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி நினைவாக கடலில் பேனா வடிவ சிலை அமைப்பது ஏற்கனவே திட்டமிடப்பட்ட ஒன்று தான் என அமைச்சர் எ.வ.வேலு கூறியுள்ளார்.

சென்னை,

மெரினா கடலுக்கு நடுவே ரூபாய் 80 கோடி செலவில் 134 அடி உயரத்தில் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் நினைவாக பேனா வடிவத்தில் நினைவிடம் அமைக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.

மேலும் கடலுக்கு நடுவே அமைந்துள்ள இந்த நினைவுச் சின்னத்தை பொதுமக்கள் பார்வையிட வசதியாக 650 மீட்டர் கண்ணாடி பாலம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

மாநில கடலோர மண்டல மேலாண்மை ஆணையம் இத்திட்டத்திற்கு அனுமதி அளித்துள்ளதாகவும் இந்த திட்டத்தின் பணி விரைவில் தொடங்கும் என்றும் கூறப்படுகிறது.

இந்நிலையில் இது குறித்து அமைச்சர் எ.வ.வேலு விளக்கம் அளித்துள்ளார். அவர் குறிப்பிட்டுள்ளதாவது,

முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி நினைவாக கடலில் பேனா வடிவ சிலை அமைப்பது ஏற்கனவே திட்டமிடப்பட்ட ஒன்று தான். புதிய அறிவிப்பு அல்ல.

பேனாவின் வடிவம் எப்படி அமைய உள்ளது என்பது குறித்து இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை. இது கலைஞருக்கு மக்கள் செய்யும் நன்றிக் கடன்.

பேனா சிலை குறித்து சிலர் சமூக வலைதளங்களிலும், அமைப்புகள் பெயரிலும் விமர்சிப்பது கருணாநிதிக்கு செய்யும் துரோகம், அவருக்கு செய்ய வேண்டிய கடமையை தமிழக அரசு கண்டிப்பாக செய்யும் என்றார்.


Next Story