கருணாநிதி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை


கருணாநிதி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
x

திருவண்ணாமலை தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் கருணாநிதி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் 100-வது பிறந்த நாளை முன்னிட்டு திருவண்ணாமலை வேலூர் சாலை அண்ணா நுழைவு வாயில் அருகில் உள்ள அவரது உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

நிகழ்ச்சிக்கு சி.என்.அண்ணாதுரை எம்.பி., தலைமை செயற்குழு உறுப்பினர்கள் இரா.ஸ்ரீதரன், பொன்.முத்து, எம்.எல்.ஏ.க்கள் மு.பெ.கிரி, பெ.சு.தி.சரவணன், மாவட்ட பொருளாளர் பன்னீர்செல்வம், மாவட்ட துணை செயலாளர் ப்ரியா விஜயரங்கன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர செயலாளர் கார்த்திவேல்மாறன் வரவேற்றார்.

மருத்துவரணி துணைத்தலைவர் டாக்டர் எ.வ.வே.கம்பன் தலைமையில் கட்சியின் முன்னோடிகள் கருணாநிதி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

அதைத்தொடர்ந்து ஒடிசா மாநில ரெயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர்கள் ஆராஞ்சி ஆறுமுகம், சி.சுந்தரபாண்டியன், மெய்யூர் சந்திரன், த.ரமணன், பெ.கோவிந்தன், நகரமன்ற தலைவர் நிர்மலாவேல்மாறன், ஒன்றியக்குழு தலைவர்கள் கலைவாணிகலைமணி, பரிமளா கலையரசு, அய்யாகண்ணு, தமயந்தி ஏழுமலை உள்பட மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.


Next Story