முதல்-அமைச்சர் காப்பீடு திட்டத்தினை முதன்முதலாக கொண்டு வந்தவர் கருணாநிதி


முதல்-அமைச்சர் காப்பீடு திட்டத்தினை முதன்முதலாக கொண்டு வந்தவர் கருணாநிதி
x

முதல்-அமைச்சர் காப்பீடு திட்டத்தினை முதன்முதலாக கொண்டு வந்தவர் கருணாநிதி என்று திருவண்ணாமலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு பேசினார்.

திருவண்ணாமலை

முதல்-அமைச்சர் காப்பீடு திட்டத்தினை முதன்முதலாக கொண்டு வந்தவர் கருணாநிதி என்று திருவண்ணாமலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு பேசினார்.

மருத்துவ காப்பீடு திட்ட அறிமுக விழா

திருவண்ணாமலை நகராட்சி பழைய அரசு மருத்துவமனை வளாகத்தில் செயல்பட்டு வரும் ரோட்டரி டயாலிசிஸ் சென்டரில் முதல்-அமைச்சரின் மருத்துவ காப்பீடு திட்ட அறிமுக விழா நடைபெற்றது.

துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி, சி.என்.அண்ணாதுரை எம்.பி., மாநில தடகள சங்கத் துணைத்தலைவர் டாக்டர் எ.வ.வே.கம்பன், முன்னாள் நகரமன்றத் தலைவர் இரா.ஸ்ரீதரன், மு.பெ.கிரி எம்.எல்.ஏ., நகரமன்றத் தலைவர் நிர்மலாவேல்மாறன், மாவட்ட அனைத்து வியாபாரிகள் சங்க தலைவர் மண்ணுலிங்கம், அரசு வழக்கறிஞர் புகழேந்தி, ரோட்டரி சமூல நல அறக்கட்டளை பொருளாளர் அருண்மொழிவர்மன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ரோட்டரி சமூல நல அறக்கட்டளை தலைவர் கிருஷ்ணகுமார் வரவேற்றார்.

விழாவில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பயனாளிகளுக்கு முதல்- அமைச்சரின் மருத்துவ காப்பீடு அட்டையினை வழங்கி பேசினார்.

அப்போது அவர் பேசியதாவது:-

கலைஞர் காப்பீடு திட்டம்

ரோட்டரி சங்கத்தின் சீரிய முயற்சியால் திருவண்ணாமலை பழைய அரசு மருத்துவமனை வளாகத்தில் ரோட்டரி டயாலிசிஸ் சென்டர் நடைபெற்ற வருகிறது. பொதுமக்கள் இதனை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

முதல்- அமைச்சர் காப்பீடு திட்டத்தினை முதன்முதலாக கருணாநிதியால் கலைஞர் காப்பீடு திட்டம் என்று கொண்டு வரப்பட்டது.

பின்னர் வந்த அரசு அந்த திட்டத்தினை முதல்- அமைச்சர் காப்பீடு திட்டம் என்று பெயர் மாற்றி விட்டனர். பொருளாதாரத்தில் பின் தங்கி உள்ளவர்கள், ஏழை, எளியோர்கள் பல்வேறு நோய்களுக்கு லட்சக்கணக்கில் செலவு செய்து சிறப்பு டாக்டர்களை கொண்டு நோய்களை குணப்படுத்துவது என்பது மிகவும் கடினமானதாக இருந்தது.

அதனால் நடுத்தர, ஏழை மக்களுக்காகவே தலைவர் கருணாநிதியால் காப்பீடு திட்டம் தொடங்கப்பட்டது. மேலும் ரோட்டரி சங்க உறுப்பினர்களுக்கு நான் ஒரு கோரிக்கை வைக்கிறேன்.

சாலை விபத்து பற்றிய விழிப்புணர்வு

சாலை விபத்து பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். சாலைகளில் விழிப்புணர்வு பதாகைகள் வைக்கலாம். பள்ளி மாணவ, மாணவிகளுக்கு சிறிய புத்தகமாக வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தலாம்.

ரோட்டரி சங்கம் மூலம் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளிடம் சாலை விபத்து குறைப்பது எப்படி, தன்னை பாதுகாத்துக் கொள்வது எப்படி என்ற விழிப்புணர்வுகளை பள்ளியிலும், கல்லூரியிலும் ஏற்படுத்திவிட்டாலே விபத்து குறைந்து விடும். பள்ளிக்கூடத்தில் சொல்லிக் கொடுக்கிற விழிப்புணர்வை குடும்பத்தில் உள்ளவர்கள் அறிவார்கள்.

எனவே மாவட்டத்தில் இனி வரும் காலங்களில் ரோட்டரி சங்கம் மூலம் அதிக விழிப்புணர்வு ஏற்படுத்தி விபத்தினை குறைக்க விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

மேலும் தமிழக அரசு பல்வேறு நிலைகளில் முயற்சி எடுத்து வருகிறது.

இவ்வாறு அவர் பேசினார்.

தொடர்ந்து அவர் ரோட்டரி டயாலிசிஸ் சென்டரை நேரில் சென்று பார்வையிட்டார்.

விழாவில் சுகாதாரத்துறை இணை இயக்குனர் கேப்டன் ஏழுமலை, ரோட்டரி நிர்வாகிகள் டாக்டர் சோமசுந்தரம், எஸ்.பி.தனக்கோட்டி, நாகப்பன், விஜயன், வின்சென்ட், திருநாவுக்கரசு, டாக்டர் செந்தில், அன்பரசு உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் ரோட்டரி சமூல நல அறக்கட்டளை செயலாளர் ஏ.பி.எஸ்.பழனி நன்றி கூறினார்.


Next Story