கருணாநிதி 5-ம் ஆண்டு நினைவு தினம்: முதல்-அமைச்சர் தலைமையில் தி.மு.க.வினர் அமைதி பேரணி

மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் நினைவு தினத்தை முன்னிட்டு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைதி பேரணி தொடங்கியது.
சென்னை,
கருணாநிதியின் நூற்றாண்டு விழா மாநிலம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. அடுத்த ஆண்டு ஜூன் 3-ம் தேதி வரை பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில், கருணாநிதியின் 5-ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று திமுகவினர் அமைதி பேரணி மேற்கொண்டனர். அண்ணா சாலை ஓமந்தூரார் தோட்ட வளாகத்தில் உள்ள கருணாநிதி சிலையில் இருந்து அமைதிப் பேரணி தொடங்கியது. சென்னை மெரினா நினைவிடத்தில் உள்ள கருணாநிதி நினைவிடம் வரை இந்த பேரணி நடைபெறுகிறது. மெரினா நினைவிடத்தில் கட்சியினர் மரியாதை செலுத்துகிறார்கள். இந்த அமைதி பேரணியில் அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், கட்சி நிர்வாகிகள் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.
Related Tags :
Next Story