கருணாநிதி பிறந்தநாள் விழா


கருணாநிதி பிறந்தநாள் விழா
x

வாசுதேவநல்லூர் பகுதியில் கருணாநிதி பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

தென்காசி

வாசுதேவநல்லூர்:

கருணாநிதி பிறந்த நாள் விழா வாசுதேவநல்லூர் வடக்கு ஒன்றியம் திருமலாபுரம், அருளாட்சி, ராமநாதபுரம், சரவணாபுரம், தேவிபட்டணம், விஸ்வநாதப்பேரி, ராயகிரி, தளவாய்புரம், சிவகிரி, இனாம் கோவில்பட்டி, இடையன்குளம், மேலக்கரிசல்குளம் உள்ளிட்ட இடங்களில் கட்சி கொடியேற்றியும், இனிப்பு, அன்னதானம் வழங்கியும் கொண்டாடப்பட்டது.

நிகழ்ச்சிக்கு வாசுதேவநல்லூர் ஒன்றிய செயலாளரும், யூனியன் தலைவருமான பொன். முத்தையா பாண்டியன் தலைமை தாங்கினார். மாநில தீர்மானக்குழு உறுப்பினர் சரவணன், மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் மனோகரன், சிவகிரி பேரூராட்சி தலைவர் கோமதி சங்கரி சுந்தரவடிவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

1 More update

Next Story