திருவண்ணாமலையில் கருணாநிதி பிறந்த நாள் விழா


திருவண்ணாமலையில் கருணாநிதி பிறந்த நாள் விழா
x

திருவண்ணாமலையில் கருணாநிதி பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை

திருவண்ணாமலையில் தி.மு.க. சார்பில் கருணாநிதி பிறந்த நாள் விழா ஊர்வலம் நடைபெற்றது. மருத்துவர் அணி துணைத்தலைவர் டாக்டர் எ.வ.வே.கம்பன் தலைமை தாங்கினார். சி.என்.அண்ணாதுரை எம்.பி., தலைமை செயற்குழு உறுப்பினர் இரா.ஸ்ரீதரன், மாவட்ட பொருளாளர் எஸ்.பன்னீர்செல்வம், நகரமன்ற தலைவர் நிர்மலா வேல்மாறன், ஒன்றியக்குழு தலைவர் கலைவாணிகலைமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர செயலாளர் கார்த்திவேல்மாறன் வரவேற்றார்.

இந்த ஊர்வலம் திருவண்ணாமலை மாட வீதியில் உள்ள கடலைக்கடை சந்திப்பில் இருந்து தேரடி வீதி, காந்தி சிலை, கொசமடத்தெரு, கிருஷ்ணன் தெரு வழியாக அண்ணா சிலையை சென்றடைந்தது. அங்கு அலங்கரித்து வைக்கப்பட்டு கருணாநிதி உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

பின்னர் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து மாவட்ட தி.மு.க. அலுவலகத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்த உருவருப்படத்திற்கு டாக்டர் எ.வ.வே.கம்பன் மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் பொதுமக்களுக்கு உணவு பொட்டலங்கள், இனிப்புகள் வழங்கினார். திருவணணாமலை அண்ணா சிலை அருகில் மாவட்ட இளைஞர் அணி சார்பில் 500 பேருக்கு உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டது.

திருவண்ணாமலை நகராட்சியில் உள்ள அனைத்து வார்டுகளிலும் அன்னதானம், இனிப்பு, வேட்டி-சேலைகள், நலத்திட்ட உதவிகளை எ.வ.வே.கம்பன் வழங்கினார்.

1 More update

Next Story