ஈரோடு கருங்கல்பாளையம் சந்தையில்90 சதவீத மாடுகள் விற்பனை


ஈரோடு கருங்கல்பாளையம் சந்தையில்90 சதவீத மாடுகள் விற்பனை
x

ஈரோடு கருங்கல்பாளையம் சந்தையில் 90 சதவீத மாடுகள் விற்பனையானது

ஈரோடு

ஈரோடு கருங்கல்பாளையம் சோதனைச்சாவடி அருகில் வாரந்தோறும் புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் மாட்டுச்சந்தை கூடி வருகிறது. அதன்படி நேற்று முன்தினம் நடந்த சந்தைக்கு 70-க்கும் மேற்பட்ட கன்றுக்குட்டிகளை விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். இதில் கன்றுக்குட்டி ஒன்று ரூ.7 ஆயிரம் முதல் ரூ.25 ஆயிரம் வரை விலைபோனது.

இந்த நிலையில் நேற்று வழக்கமான சந்தை கூடியது. இந்த சந்தைக்கு தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து விவசாயிகள் தங்களது மாடுகளை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர். 300 எருமை மாடுகள், 350 பசு மாடுகள் என மொத்தம் 650 மாடுகள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டு இருந்தன. இதில் பசு மாடு ஒன்று ரூ.25 ஆயிரம் முதல் ரூ.80 ஆயிரம் வரையும், எருமை மாடு ஒன்று ரூ.25 ஆயிரம் முதல் ரூ.60 ஆயிரம் வரையும் விற்பனை ஆனது. தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், கேரளா, ஆந்திரா, கர்நாடகா, மாராட்டியம், தெலுங்கானா உள்ளிட்ட பல்வேறு வெளிமாநிலங்களில் இருந்தும் வந்திருந்த வியாபாரிகள், விவசாயிகளிடம் நேரடியாக விலை பேசி மாடுகளை வாங்கி வாகனங்களில் ஏற்றிச்சென்றனர்.

இதுகுறித்து சந்தை நிர்வாகிகள் கூறும்போது, 'தற்போது கேரளா, கர்நாடகா மற்றும் தமிழகத்தில் குறிப்பிட்ட பகுதிகளில் பருவமழை தொடங்கி உள்ளதால் கால்நடைகளுக்கு எளிதில் பசுந்தீவனம் கிடைக்கிறது. இதனால் மாடுகளை வாங்க வியாபாரிகள் அதிக அளவில் ஆர்வம் காட்டினர். நேற்று வரத்தான மாடுகளில், 90 சதவீத மாடுகள் விற்பனையானது' என்றனர்.


Next Story