கருங்கல்பாளையம் சந்தையில் 90 சதவீத மாடுகள் விற்பனை
கருங்கல்பாளையம் சந்தையில் 90 சதவீத மாடுகள் விற்பனையானது.
ஈரோடு
ஈரோடு கருங்கல்பாளையம் பகுதியில் கடந்த 2 நாட்களாக மாட்டுச்சந்தை கூடியது. இந்த சந்தைக்கு ஈரோடு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான விவசாயிகள் தங்களது மாடுகளை விற்பனைக்காக கொண்டு வந்தனர்.
400 பசுமாடுகள், 150 எருமை மாடுகள் மற்றும் 100 கன்றுக்குட்டிகள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டன. இதில் பசு மாடு ஒன்று ரூ.30 ஆயிரம் முதல் ரூ.62 ஆயிரம் வரையிலும், எருமை மாடு ரூ.25 ஆயிரம் முதல் ரூ.45 ஆயிரம் வரையிலும் விலை போனது. பல்வேறு மாநிலங்களை சேர்ந்த வியாபாரிகள் வந்து, விவசாயிகளிடம் விலை பேசி மாடுகளை வாகனங்களில் ஏற்றி சென்றார்கள். நேற்று கூடிய சந்தையில் 90 சதவீத மாடுகள் விற்பனையானதாக சந்தை நிர்வாகிகள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story