கருப்பண்ணசாமி கோவில் கும்பாபிஷேக விழா


கருப்பண்ணசாமி கோவில் கும்பாபிஷேக விழா
x
தினத்தந்தி 28 Jun 2023 7:30 PM GMT (Updated: 28 Jun 2023 7:30 PM GMT)

உப்புக்கோட்டையில் கருப்பண்ணசாமி கோவில் கும்பாபிஷேக விழா நடந்தது.

தேனி

உப்புக்கோட்டையில் உள்ள கருப்பண்ணசாமி, முத்தையாசாமி, சப்த கன்னிமார், விநாயகர் மற்றும் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நேற்று நடைபெற்றது. விழாவையொட்டி நேற்று முன்தினம் மாலை பெண்கள் முளைப்பாரி ஊர்வலம் நடந்தது. அதில் விநாயகர், மாரியம்மன் சிலைகளை முக்கிய வீதி வழியாக கொண்டு வந்து முல்லைப்பெரியாற்றை அடைந்தனர். அங்கு சிலைகளுக்கு பூஜை செய்யப்பட்டது. பின்னர் ஆற்றில் இருந்து கோவிலுக்கு சாமி சிலைகளை கொண்டு வந்து பிரதிஷ்டை செய்து வழிபாடு நடத்தினர். தொடர்ந்து நடந்த யாகசாலை பூஜையில் கருப்பண்ணசாமி, கன்னிமார், விநாயகர் மற்றும் மாரியம்மன் சிலைக்கு பால், பன்னீர், விபூதி, இளநீர் அபிஷேகம் செய்தனர். பின்னர் புனித நீரை ஊற்றி கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. விழாவில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.


Next Story