கரூர்: வேன் கவிழ்ந்ததில் அய்யப்ப பக்தர்கள் 10 பேர் காயம்


கரூர்: வேன் கவிழ்ந்ததில் அய்யப்ப பக்தர்கள் 10 பேர் காயம்
x
தினத்தந்தி 9 Jan 2024 3:53 AM GMT (Updated: 9 Jan 2024 4:54 AM GMT)

கரூரில் வேன் கவிழ்ந்து விபத்தில் சிக்கிய அய்யப்ப பக்தர்கள் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

கரூர்,

கரூர் அருகே வேன் ஒன்று சென்று கொண்டிருந்தது. அதில், சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு மாலை அணிந்து சென்ற கர்நாடகாவை சேர்ந்த அய்யப்ப பக்தர்கள் சிலர் பயணம் செய்து கொண்டு இருந்தனர்.

அந்த வேன் தவிட்டுபாளையத்தில் சென்றபோது, திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது. இந்த விபத்தில் வேனில் இருந்த அய்யப்ப பக்தர்களில் 10 பேர் காயம் அடைந்தனர்.

இதுபற்றி தகவல் அறிந்து வந்த போலீசார், மீட்பு பணியில் ஈடுபட்டனர். காயமடைந்த பக்தர்கள் மீட்கப்பட்டு அருகேயுள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர்.

விபத்துக்கான காரணம் பற்றி உடனடியாக தெரிய வரவில்லை. இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story
  • chat