கரூர் மாநகராட்சி சாதாரண கூட்டம்


கரூர் மாநகராட்சி சாதாரண கூட்டம்
x

கரூர் மாநகராட்சியின் சாதாரண மற்றும் அவசர கூட்டம் நேற்று நடைபெற்றது.

கரூர்

சாதாரண கூட்டம்

கரூர் மாநகராட்சியின் சாதாரண மற்றும் அவசர கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மேயர் கவிதா கணேசன் தலைமை தாங்கினார். துணைமேயர் தாரணி சரவணன், ஆணையர் ரவிச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இக்கூட்டத்தில் 101 தீர்மானங்கள் முன்மொழியப்பட்டன அப்போது கவுன்சிலர்கள் கூறுகையில், 14-வது வார்டு பகுதியில் அமைந்துள்ள அங்கன்வாடி கட்டிடத்தில் மராமத்து பணி செய்யப்பட்ட நிலையில் அங்கு வரும் குழந்தைகளுக்கு கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏதும் இல்லாமல் உள்ளது. கரூர் காமராஜ் மார்க்கெட் பகுதியில் வியாபாரி அல்லாத நபருக்கு கடை ஒதுக்கப்பட்டு உள்ளது என்று கூறினர்.

முறைப்படி...

அதற்கு மேயர் பதில் அளித்து கூறுகையில், கரூர் காமராஜ் மார்க்கெட்டில் புதிய கட்டிடங்கள் கட்டுவதற்கான பணி தொடங்கி நடைபெற்று வருவதால் ஏற்கனவே அங்கு செயல்பட்டு வந்த கடைகளுக்கு பதிலாக அப்பகுதியில் 97 தற்காலிக கடைகள் அமைக்கப்பட்டு உள்ளன. அதில் தற்போது 40 கடைகள் மட்டுமே இயங்கி வருவகிறது.தனிநபர் யாருக்கும் அங்கு கடை ஒதுக்கப்படவில்லை என்றார். அப்போது மாநகராட்சி மண்டல குழு தலைவர் கூறுகையில், அங்கு இயங்கி வரும் தற்காலிக கடைகள் அனைத்தும் வியாபாரிகளுக்கு மட்டுமே முறைப்படி ஒதுக்கப்பட்டு உள்ளது. தனிநபர் யாருக்கும் அங்கு கடை ஒதுக்கப்படவில்லை என்றார்.

தீர்மானம்

இதனையடுத்து நடைபெற்ற அவசர கூட்டத்தில், கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட திருமாநிலையூர் பகுதியில் ரூ.62 கோடியே 50 லட்சம் மதிப்பீட்டில் பணி மேற்கொள்வதற்கு நிர்வாக அனுமதி வழங்குவது எனவும், அதன்படி தொழில்நுட்ப அனுமதி பெறப்பட்டு பணிகளை மேற்கொள்ள முதன் முறையாக 3.8.2022 அன்று ஒப்பந்த புள்ளி கூறப்பட்டதில் ஒப்பந்ததாரரிடம் இருந்து வரப்பெற்ற ஒப்பந்தங்களை முடிவு செய்ய மன்றத்தில் தீர்மானம் கொண்டு வரப்பட்டது.கூட்டத்தில், கவுன்சிலர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story