கரூர் மாவட்ட அளவிலான தடகள போட்டி
கரூர் மாவட்ட அளவிலான தடகள போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிழ்கள் வழங்கப்பட்டன.
தடகள போட்டி
கரூர் மாவட்ட தடகள சங்கம் சார்பில் இளையோர் மற்றும் பொது பிரிவினருக்கான மாவட்ட அளவிலான தடகள போட்டி கரூர் அருகே உள்ள புலியூர் கவுண்டம்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் ஆண்கள், பெண்களுக்கு என தனித்தனியாக நடைபெற்றது. போட்டியில் மாவட்ட முழுவதும் பள்ளி, கல்லூரி மற்றும் விளையாட்டு சங்கம் சார்பில் 12,14,16,18,20 வயது மற்றும் பொது பிரிவுகளில் போட்டி நடைபெற்றது.
சான்றிதழ்கள் வழங்கல்
இதில் 100 மீட்டர், 200 மீட்டர், 400 மீட்டர், 800 மீட்டர், 1200 மீட்டர் நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், குண்டு எறிதல், வட்டு எறிதல், தடை ஓட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றன. இதில் ஆண்கள், பிரிவில் 400 பெரும், பெண்கள் பிரிவில் 300 பேரும் கலந்து கொண்டு விளையாடினர்.
பெண்களுக்கான போட்டியை தடகள சங்க தலைவர் கனகராஜ் தொடங்கி வைத்தார். பின்னர் போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
மாநில அளவிலான போட்டிக்கு தகுதி
போட்டியில் வெற்றி பெற்றவர்கள் தகுதியின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு, நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் அடுத்த மாம் (செப்டம்பர்) நடைபெறும் மாநில அளவிலான தடகள போட்டியில் பங்கேற்பார்கள். இதற்கான ஏற்பாடுகளை கரூர் மாவட்ட தடகள சங்க செயலாளர் பெருமாள், பொருளாளர் செல்வராஜ் ஆகியோர் செய்திருந்தனர்.
கரூர், ஆக.28-
சாலை பராமரிப்பு ஊழியர்கள் சங்கம் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி 8-ந்தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என மாநில செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மாநில செயற்குழு கூட்டம்
தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பராமரிப்பு ஊழியர்கள் சங்கம் சார்பில் மாநில செயற்குழு கூட்டம் வெங்கமேட்டில் நடைபெற்றது இதற்கு மாநில தலைவர் வெங்கிடு தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் சிங்கராஜா வரவேற்று பேசினார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில செயலாளர் செந்தில்குமார் சிறப்புரையாற்றினார்.
சாலை பணியாளர்களின் 41 மாதபணிநீக்க காலத்தை எந்த விதமான பலன்களும் பொருந்தாத வகையில் வெளியிட்ட அரசாணையை ரத்து செய்து, 41 மாதகால பணிநீக்கத்தை பணி ஓய்வுக்கு பின் ஓய்வூதிய பலன்களும், பணி கொடைக்கும் பொருந்தக்கூடிய வகையில் அரசாணை வெளியிட வேண்டும்,
ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்
அரசாணை 338 நிதித்துறை ஊதியப் பிரிவு 26.8.2023-ன்படி சாலை பணியாளர்களை திறன்மிகு இல்லா பணியாளர் என பெயர் மாற்றம் செய்ய வேண்டும், பணி அமைப்பு உயர் அலுவலர்கள் பணி வரன்முறை செய்த தேதி கொண்டு கோட்ட முதுநிலை பட்டியல் வெளியிட வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அடுத்த மாதம் (செப்டம்பர்) 8-ந்தேதி அனைத்து கோட்ட பொறியாளர் அலுவலகம் முன்பு முரசு கொட்டி ஆர்ப்பாட்டம் நடத்துவது.
வருகிற அக்டோபர் மாதம் 2-ந்தேதி காந்திஜெயந்தி அன்று ரத்த கையெழுத்து இயக்கம் நடத்தி, அந்த கையெழுத்து படிவங்களை வருகிற அக்டோபர் மாதம் 13-ந்தேதி தமிழக முதல்-அமைச்சர் முகாம் அலுவலகத்தில் வழங்குவது என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.