கரூர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்


கரூர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்
x

கரூர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கரூர்

கரூர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் https://skilltraining.tn.gov.in/DET என்ற இணையதளம் மூலமாக ஆன்லைனில் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகிறது. விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் வருகிற 20-ந்தேதியாகும். கரூர் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் தையல் தொழிற்நுட்ப பயிற்சி (8-ம் வகுப்பு மற்றும் 10-ம் வகுப்பு தேர்ச்சி, பயிற்சி காலம் 1 ஆண்டு, மகளிர் மட்டும்). கணினி தொழிற்நுட்ப பயிற்சி (10-ம் வகுப்பு தேர்ச்சி, பயிற்சி காலம் -1 ஆண்டு, மகளிர் மட்டும்). மெக்கானிக் ஆட்டோ பாடி ரிப்பேர் (10-ம் வகுப்பு தேர்ச்சி, பயிற்சி காலம் 1 ஆண்டு, ஆண், பெண் இருபாலரும்). ஆப்ரேட்டர் அட்வான்சுடு மெசின் டூல் (10-ம் வகுப்பு தேர்ச்சி, பயிற்சி காலம் -2 ஆண்டுகள், ஆண், பெண் இருபாலரும்).அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் சேரும் பயிற்சியாளர்களுக்கு இலவச பஸ் கட்டண சலுகை, மிதிவண்டி, மடிக்கணினி, பாடப்புத்தகங்கள், சீருடைகள், காலணிகள் அரசால் வழங்கப்படும். மேலும் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களின் சேர்க்கை தொடர்பான கூடுதல் விவரங்களை கரூர் அரசினர் தொழிற்பயிற்சி நிலைய முதல்வரை தொலைபேசி (04324 -222111, 75388 77430) வாயிலாக அல்லது நேரில் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் என கரூர் மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.


Next Story