தமிழ்நாடு எறிப்பந்து அணிக்கு கரூர் மாணவர் தேர்வு


தமிழ்நாடு எறிப்பந்து அணிக்கு கரூர் மாணவர் தேர்வு
x

தமிழ்நாடு எறிப்பந்து அணிக்கு கரூர் மாணவர் தேர்வானார்.

கரூர்

தமிழ்நாடு த்ரோபால் சங்கம் சார்பில் சீனியர் ஆண்களுக்கான வீரர்கள்தேர்வு சென்னையில் நடைபெற்றது. இதில் தமிழகம் முழுவதும் இருந்து பலர் கலந்து கொண்டு தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர். இதில், கரூர் அரசு கலைக்கல்லூரி மாணவர் நந்தகுமார் தமிழ்நாடு எறிப்பந்து அணிக்கு தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து தேர்வு செய்யப்பட்ட மாணவரை கல்லூரி முதல்வர் கவுசல்யாதேவி, பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள் பாராட்டினர்.


Next Story