கருடசேவை உற்சவம்
சிங்கவரம் ரங்கநாதர் கோவிலில் கருடசேவை உற்சவம்
விழுப்புரம்
செஞ்சி
செஞ்சி அருகே உள்ள சிங்கவரம் கிராமத்தில் ரங்கநாதப் பெருமாள் கோவிலில் 47-ம் ஆண்டு கருடசேவை உற்சவம் நேற்று சிறப்பாக நடைபெற்றது. இதை முன்னிட்டு காலை 6 மணிக்கு மேல் அரங்கநாயகி சமேத அரங்கநாதர் சாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து சிங்கவரம் கிராமத்தில் சாமி வீதி உலாவும், மாலையில் கருட வாகனத்தில் அரங்கநாதர் சாமி செஞ்சி காந்தி கடைவீதியில் வீதி உலாவும் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை செஞ்சி வாணிய வைசியர் மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர்.
Related Tags :
Next Story