கஸ்தூரி ரங்க பெருமாள் கோவில் குடமுழுக்கு


கஸ்தூரி ரங்க பெருமாள் கோவில் குடமுழுக்கு
x
தினத்தந்தி 8 July 2023 12:15 AM IST (Updated: 8 July 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

விளக்குடி கஸ்தூரி ரங்க பெருமாள் கோவில் குடமுழுக்கு நடந்தது.

திருவாரூர்

திருத்துறைப்பூண்டி:

திருத்துறைப்பூண்டி அருகே உள்ள விளக்குடி கஸ்தூரி ரங்க பெருமாள் கோவிலில் குடமுழுக்கு நடந்த முடிவு செய்யப்பட்டு திருப்பணிகள் நடைபெற்று வந்தது. திருப்பணிகள் நிறைவு பெற்றதை தொடர்ந்து குடமுழுக்கு விழா நடந்தது. முன்னதாக யாகசாலை பூஜைகள், வாஸ்து ஹோமம், அனுக்ஞை, சங்கல்பம், கலச ஸ்தாபனம், பஞ்சகவ்ய ஸ்தாபனம், சுதர்சன ஹோமம், திருமஞ்சனம், அஷ்டபந்தனம் சாற்றுதல், மகா சாந்தி ஹோமம், உக்த ஹோமம் ஆகியவை நடந்தது. இதை தொடர்ந்து யாக சாலையில் இருந்து புனித நீர் அடங்கிய கடங்கள் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு கோபுர விமான கலசங்களில் ஊற்றப்பட்டு குடமுழுக்கு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Next Story