கட்டபெட்டு அணி சாம்பியன்
மாவட்ட அளவிலான கால்பந்து போட்டியில் கட்டபெட்டு அணி சாம்பியன் வென்றது.
நீலகிரி
கோத்தகிரி
கோத்தகிரி அருகே கடைகம்பட்டி கிராமத்தில் பாரதி இளைஞர் மன்றம் சார்பில் மாவட்ட அளவிலான கால்பந்து போட்டிகள் கடந்த ஒரு வாரமாக நடைபெற்று வந்தது. நாக் அவுட் முறையில் நடத்தப்பட்டது. போட்டிகளில் வெற்றி பெற்ற கட்டபெட்டு, உயிலட்டி அணிகள் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றன. இறுதி போட்டியில் இரு அணிகளும் சம பலத்துடன் விளையாடியதால் கோல்கள் எதுவுமின்றி சமநிலையில் முடிவடைந்தது. பின்னர் வெற்றி, தோல்வியை நிர்ணயிக்க நடந்த டை பிரேக்கரில் கட்டபெட்டு அணி வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை தட்டி சென்றது. தொடர்ந்து நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் சாம்பியன் வென்ற, 2-ம் இடம் பிடித்த அணிகளுக்கு பரிசு கோப்பைகள் வழங்கப்பட்டன.
Related Tags :
Next Story