வருவாய்த்துறை ஊழியர் சங்கத்தினர் காத்திருப்பு போராட்டம்


வருவாய்த்துறை ஊழியர் சங்கத்தினர் காத்திருப்பு போராட்டம்
x
திருப்பூர்


கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தயம் வட்ட ஆதிதிராவிடர் நலத்துறை தனிதாசில்தாரின் பணியிடை நீக்கத்தை ரத்து செய்யக்கோரியும், கள்ளக்குறிச்சி கலெக்டரின் ஊழியர் விரோதபோக்கை கண்டித்தும் தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் சார்பில் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தாசில்தார் அலுவலகம், ஆர்.டி.ஓ. அலுவலகம், கலெக்டர் அலுவலகத்தில் வருவாய்த்துறை ஊழியர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் சங்கத்தின் மாவட்ட துணை தலைவர் சிவக்குமார் தலைமையில் போராட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் தங்கவேல் கோரிக்கைகள் குறித்து பேசினார். இதில் 80-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். இதுபோல் மாவட்டத்தின் அனைத்து தாசில்தார் அலுவலகங்கள், ஆர்.டி.ஓ. அலுவலகங்களில் வருவாய்த்துறை ஊழியர்கள் அமர்ந்து போராட்டம் நடத்தினார்கள். இந்த போராட்டம் காரணமாக தாசில்தார் அலுவலகம், ஆர்.டி.ஓ. அலுவலகம், கலெக்டர் அலுவலக பணிகள் நேற்று பாதிக்கப்பட்டது.


Next Story