பொதுமக்கள் காத்திருப்பு போராட்டம்
திருப்பூர்
பல்லடம் அருகே உள்ள அனுப்பட்டி கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான இரும்பு உருக்காலையை மூட வலியுறுத்தி கிராம மக்கள் மற்றும் விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் 170 நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் நேற்று நடந்த காத்திருப்புப் போராட்ட பந்தலுக்கு நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மதியம் 1 மணிக்கு வந்து சிறப்புரை ஆற்ற உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளதால் இந்த கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது. இதனால் சீமானை பார்க்க ஆவலுடன் வந்து காத்திருந்த பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்தனர். ஆனால் காத்திருப்பு போராட்டத்தில்
தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிறுவனர் ஈசன் முருகசாமி மற்றும் இமயம் சரவணன், முன்னாள் கிராம நிர்வாக அலுவலர் பாலசுப்பிரமணியம் ஆகியோர் பேசினார்கள்.
Next Story