காட்பாடி ரெயில் நிலையம் ரூ.365 கோடியில் நவீனமயமாகிறது


காட்பாடி ரெயில் நிலையம் ரூ.365 கோடியில் நவீனமயமாகிறது
x

காட்பாடி ரெயில் நிலையம் ரூ.365 கோடியில் தரம் உயர்த்தப்பட்டு நவீனமயமாகிறது. இதற்கு பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி மூலம் 26-ந் தேதி அடிக்கல் நாட்டுகிறார்.

வேலூர்

காட்பாடி

காட்பாடி ரெயில் நிலையம் ரூ.365 கோடியில் தரம் உயர்த்தப்பட்டு நவீனமயமாகிறது. இதற்கு பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி மூலம் 26-ந் தேதி அடிக்கல் நாட்டுகிறார்.

காட்பாடி ெரயில் நிலையம்

காட்பாடி ரெயில் நிலையம் சுமார் 150 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வருகிறது. இங்கு தினமும் 120 ரெயில்கள் சென்னை மார்க்கமாவும், ஜோலார்பேட்டை மார்க்கமாகவும், திருப்பதி மார்க்கமாகவும், வேலூர் மார்க்கமாகவும் இயக்கப்பட்டு வருகின்றன. தினமும் சுமார் 30 ஆயிரம் பயணிகள் வந்து செல்கின்றனர்.

இந்த நிலையில் நாடு முழுவதும் ரெயில் நிலையங்களை மேம்படுத்த ரயில்வே துறை திட்டமிட்டது. ெரயில் நிலையங்களை பழமை மாறாமல் புதுப்பித்து ஆரம்பத்தை பறைசாற்றும் வகையில் இந்த பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

அந்த வகையில் நாடு முழுவதும் முதற்கட்டமாக 50 ரயில் நிலையங்கள் சர்வதேச அளவுக்கு தரம் உயர்த்தப்பட உள்ளது. தமிழகத்தில் காட்பாடி, சென்னை எழும்பூர், மதுரை, ராமேஸ்வரம், கன்னியாகுமரி ஆகிய 5 ரெயில் நிலையங்கள் மேம்படுத்தப்பட உள்ளதாக மத்திய ரெயில்வே மந்திரி தெரிவித்துள்ளார். மேலும் இந்த ரெயில் நிலையங்களை மேம்படுத்த ரூ.2 ஆயிரம் கோடியில் திட்டங்கள் தயார் செய்யப்பட்டு வருகின்றன.

பிரதமர் அடிக்கல் நாட்டுகிறார்

அவ்வாறு மேம்படுத்தப்பட உள்ள ரெயில் நிலையங்களில் காட்பாடி ரெயில் நிலையம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. காட்பாடி ரெயில் நிலையத்தின் மேம்பாட்டு பணிகளுக்காக ரூ.365 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. காட்பாடி ரெயில் நிலையத்தில் மேம்பாட்டு பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழா வருகிற 26-ந் தேதி நடக்கிறது. பிரதமர் நரேந்திரமோடி காணொலி காட்சி மூலம் அடிக்கல் நாட்டுகிறார்.

தரம் மேம்படுத்தப்பட உள்ள காட்பாடி ரெயில் நிலையத்தின் முகப்பு தோற்றம் புதிதாக அமைக்கப்பட உள்ளது. மேலும் காட்பாடி ரெயில் நிலையத்தில் புதிதாக சப்வே, நவீனப்படுத்தப்பட்ட பார்க்கிங் வசதிகள், கூடுதல் டிக்கெட் கவுண்டர்கள், ஓய்வு அறைகள், கழிவறைகள் உள்பட பல்வேறு வசதிகள் நவீனப்படுத்தப்பட்ட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.


Related Tags :
Next Story